ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4.90 லட்சம் நகை கொள்ளை
ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4.90 லட்சம் நகை கொள்ளை
ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4.90 லட்சம் நகை கொள்ளை
மதுரை : மதுரை நேருநகர் திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.டி.ஓ.,காசிப்பாண்டியன் (62) வீட்டில் யாரும் இல்லாதபோது, 4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 32 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நேற்று காலை காசிப்பாண்டியன் சிவகங்கைக்கும், மனைவி வசந்தா (58) தென்காசிக்கும், மகள்கள் பவானி, பகவதி ஆகியோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். பகவதி மாலை 3 மணிக்கு வந்தபோது உள்கதவு, பீரோ உடைக்கப்பட்டு, 32 பவுன் நகை, 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. துணைக் கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை விசாரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. திருடுபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்.
காசிப்பாண்டியன் மற்றும் உறவினர்களுக்கு இடையே சொத்துப் பிரச்னை உள்ளதால், அவர்களில் யாராவது முன்விரோதத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.


