Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அவலூர்பேட்டையில் மரக்கன்றுகள் நடு விழா

அவலூர்பேட்டையில் மரக்கன்றுகள் நடு விழா

அவலூர்பேட்டையில் மரக்கன்றுகள் நடு விழா

அவலூர்பேட்டையில் மரக்கன்றுகள் நடு விழா

ADDED : ஜூலை 25, 2011 11:33 PM


Google News

அவலூர்பேட்டை : அவலூர்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தின ஊர்வலம் மற்றும் மரக்கன்றுகள் நடு விழா நடந்தது.அவலூர்பேட்டை அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் அரிமா குடும்பம் சார்பில் மரக்கன்றுகள் நடு விழா நடந்தது.

தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவிகளின் சிறப்பு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார்.செஞ்சி அரிமா நிர்வாகி சுப்பிரமணி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை அரிமா சங்கத் தலைவர் அர்ஷத் துவக்கி வைத்தார். அரிமா மாவட்ட தலைவர் அய்யப்பன், ராஜவேலாயுதம், சீனுவாசன், பாஸ்கரன், டாக்டர் பிரம்மதேவி, செயலாளர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us