Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அழகிரி கூட்டாளிகள் நடத்திய கிரானைட் தொழில் : அமைச்சர் வேலுமணி ஆதாரத்துடன் புகார்

அழகிரி கூட்டாளிகள் நடத்திய கிரானைட் தொழில் : அமைச்சர் வேலுமணி ஆதாரத்துடன் புகார்

அழகிரி கூட்டாளிகள் நடத்திய கிரானைட் தொழில் : அமைச்சர் வேலுமணி ஆதாரத்துடன் புகார்

அழகிரி கூட்டாளிகள் நடத்திய கிரானைட் தொழில் : அமைச்சர் வேலுமணி ஆதாரத்துடன் புகார்

ADDED : ஆக 26, 2011 10:06 PM


Google News
Latest Tamil News

சென்னை : ''மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மற்றும் அழகிரியின் கூட்டாளிகள் பொட்டு சுரேஷ், காஞ்சி குமார், இப்ராகிம் சுல்தான் சேட் போன்றவர்கள், கிரானைட் குவாரிகளை நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன,'' என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

சட்டசபையில் இதுபற்றி நடந்த விவாதம்: குணசேகரன் - இந்திய கம்யூனிஸ்ட்: கடந்த ஆட்சியில் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவை நடந்தன.

மத்திய அமைச்சர் அழகிரி, கிரானைட் தொழிலில் ஈடுபட்டதாக, தொழில் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், தான் அவ்வாறு கிரானைட் தொழில் செய்திருந்தால் அதை நிரூபிக்க வேண்டுமென, அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் வேலுமணி : அழகிரியின் கூட்டாளிகள், பினாமி பெயரில் கனிமவளங்களை எடுத்தது உண்மை. அவற்றுக்கு உடனே தடை விதிக்கப்பட்டுள்ளது. பொட்டு சுரேஷ், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சிகுமார், இப்ராகிம் சுல்தான் சேட் போன்றவர்கள் அழகிரியின் கூட்டாளிகள் தான்.

பொன்முடி தனது மைத்துனர் மூலமும், நேரு தனது சகோதரர் மூலமும் கிரானைட் தொழிலில் ஈடுபட்டனர். இவை பற்றி எல்லாம் தீவிர விசாரணை நடத்தியதில், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, தி.மு.க., பிரமுகர் சூடம்மணியின் மகன் நாகராஜ் ஆகியோர், இயக்குனர் மற்றும் பங்குதாரராக கொண்டு, 2006 -07ம் ஆண்டில், ஒலிம்பஸ் கிரானைட் பிரைவேட் லிமிடெட் என்று நிறுவனத்தை துவக்கினர்.

இந்த நிறுவனத்துக்கு தெரியாமல், ஒரு கல் கூட போகாது. மலையையே கொண்டு போய் விட்டனர். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கடந்த ஜூன் 9ம் தேதியன்று, தான் ஒரு ஆண்டுக்கு முன்பே, அதாவது, 2010 ஏப்ரல் முதல் தேதியே, இந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டதாக, தயாநிதி அழகிரி, ஆவணம் சமர்ப்பித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக கொள்ளை அடித்து விட்டு, ஆட்சி மாற்றத்துக்கு பின், அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

குணசேகரன்: நீர்வள நில வள திட்டத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதற்கென விசாரணைக் குழு அமைத்து, உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us