ADDED : ஆக 03, 2011 11:25 PM
காரியாபட்டி : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக கல்குறிச்சி வட்டார வளமையத்தில், உயர் தொடக்க நிலை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கிரேஷ் சுலோச்சனா ரத்னாவதி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துராமலிங்கம் பார்வையிட்டனர். பயிற்றுனர்கள் ராஜாரஹீம், வள்ளி இந்திரா, ராஜசேகரன், பால்மணி கருத்தாளர்களாக செயல்பட்டனர்.


