/உள்ளூர் செய்திகள்/தேனி/தினமும் இருமுறை குடிநீர் சப்ளை : வேட்பாளர் மாநிலராஜா உறுதிதினமும் இருமுறை குடிநீர் சப்ளை : வேட்பாளர் மாநிலராஜா உறுதி
தினமும் இருமுறை குடிநீர் சப்ளை : வேட்பாளர் மாநிலராஜா உறுதி
தினமும் இருமுறை குடிநீர் சப்ளை : வேட்பாளர் மாநிலராஜா உறுதி
தினமும் இருமுறை குடிநீர் சப்ளை : வேட்பாளர் மாநிலராஜா உறுதி
ADDED : அக் 13, 2011 09:57 PM
தேனி : தேனி 33வது வார்டில் தினமும் இருமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்வேன் என தே.மு.தி.க., வேட்பாளர் மாநிலராஜா உறுதியளித்துள்ளார்.
தேனி நகராட்சி 33வது வார்டில் தே.மு.தி.க., சார்பில் முரசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மாநிலராஜா. அரசியல் குடும்பத்தை சேர்ந்த, பொதுப்பணியில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்து வரும் மாநில ராஜா கூறியதாவது: 33வது வார்டு முழுக்க சிறந்த முறையில் ரோடு வசதி செய்வேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாடு வசதி, பொது சுடுகாட்டிற்கு தடுப்புச்சுவர் வசதி செய்வேன். முல்லையாற்றில் உறைகிணறு அமைத்து தினமும் இரண்டு முறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்வேன். புதிய நூலக கட்டடம் கட்டித்தருவேன். படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் வசதி, வள்ளுவர் காலனி, வாசுகி காலனியில் திருமண மண்டபம் கட்டித்தருவேன். கருவேல்நாயக்கன்பட்டி சமுதாயக்கூடத்தை நவீனப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். முதியோர், விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை பெற்றுத்தரப்படும். என்றார்.


