UPDATED : ஜூலை 24, 2011 01:58 AM
ADDED : ஜூலை 24, 2011 01:56 AM
மதுரை:மதுரை தமிழ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு, லயன்ஸ் முன்னாள் ஆளுனர்
தங்கராஜ் தலைமையில் நடந்தது.துணைஆளுனர் முத்துராமலிங்கம் முன்னிலை
வகித்தார்.
முருகன் பப்ளிசிடிஸ் முருகன் தலைவராகவும், விஜயன்
செயலாளராகவும், முத்துகிருஷ்ணன் பொருளாளராகவும் பதவியேற்றனர். மாவட்டத்
தலைவர் ராமசாமி, வட்டத் தலைவர் ஜேசுராஜ், நிர்வாகிகள் சுப்புராஜ்,
வீரசின்னு பங்கேற்றனர்.