/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சாத்தூர் நான்கு வழிச்சாலை பாலத்தில் தொடரும் திருட்டுசாத்தூர் நான்கு வழிச்சாலை பாலத்தில் தொடரும் திருட்டு
சாத்தூர் நான்கு வழிச்சாலை பாலத்தில் தொடரும் திருட்டு
சாத்தூர் நான்கு வழிச்சாலை பாலத்தில் தொடரும் திருட்டு
சாத்தூர் நான்கு வழிச்சாலை பாலத்தில் தொடரும் திருட்டு
ADDED : செப் 03, 2011 12:21 AM
சாத்தூர் : சாத்தூர் வெங்கடாசலபுரம் உப்போடை ஆற்றின் நான்கு வழிச்சாலை பாலத்தில் உள்ள, தடுப்பு கம்பி பிஷ் பிளேட்கள் திருடப்பட்டுவருகின்றன.சாத்தூர் விருதுநகர் நான்கு வழிச்சாலை வெங்கடாசலபுரம் உப்போடை ஆற்றின் பாலம் ரோட்டில், பள்ளங்கள் இருப்பதை உணர்த்தவும், கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் பள்ளத்தில் விழாது தடுக்கும் வகையில், தடுப்பு இரும்பு வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதற்காக, நீளமான தடுப்புக்கம்பி வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள பிஷ்பிளேட்களை சிலர் திருடுகின்றனர். தற்போது ஒரு சில இரும்பு பிஷ்பிளேட்கள் மட்டும் தான் உள்ளன. இதுவும் திருடப்படும் முன், போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


