Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

ADDED : அக் 06, 2011 02:22 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில், 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த சம்பத் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மேலவை வார்டு பிரதிநிதியாக உள்ளார். மேலும், அ.தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். வேட்பாளர் சம்பத், ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் செங்கோடனின் சகோதரி மகன்.

அவர், அந்தப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சம்பத் போட்டியிடும் 16வது வார்டில் நடக்கும் கோவில் திருப்பணி மற்றும் பல்வேறு விழாக்களில் முன் நின்று பணியாற்றுபவர். வார்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் ஆர்வம் கொண்டவர்.

நகராட்சியின், 16வது வார்டில் போட்டியிடும் சம்பத் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், 16வது வார்டில் களம் இறங்கி உள்ளேன். இப்பகுதிக்கு நான் நன்கு அறிமுகமானவன். என்னை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்தால், இப்பகுதியில் நூலகம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், அரசு வழங்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், ஏழைப்பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் சீரான குடிநீர் வழங்கவும், சாக்கடை பராமரிப்பும் மேற்கொள்ளப்படும். எந்த நேரத்திலும் வார்டு மக்கள் அழைத்தால், ஓடிவந்து அவர்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறேன். ஏ.எஸ்.பேட்டையில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் களம் இறங்கி உள்ள எனக்கு இப்பகுதி மக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us