/உள்ளூர் செய்திகள்/மதுரை/"ஏ' பார் அம்மா... "இ' பார் எலெக்ஷன்... ரகசியமாக பாடம் படிக்கும் அரசியல்வாதிகள்"ஏ' பார் அம்மா... "இ' பார் எலெக்ஷன்... ரகசியமாக பாடம் படிக்கும் அரசியல்வாதிகள்
"ஏ' பார் அம்மா... "இ' பார் எலெக்ஷன்... ரகசியமாக பாடம் படிக்கும் அரசியல்வாதிகள்
"ஏ' பார் அம்மா... "இ' பார் எலெக்ஷன்... ரகசியமாக பாடம் படிக்கும் அரசியல்வாதிகள்
"ஏ' பார் அம்மா... "இ' பார் எலெக்ஷன்... ரகசியமாக பாடம் படிக்கும் அரசியல்வாதிகள்
ADDED : அக் 06, 2011 04:13 AM
மழைக்குகூட பள்ளிக்கு ஒதுங்காதவர்களில் சிலர் இன்று எம்.பி.,க்களாகவும்,
எம்.எல்.ஏ.,க்களாகவும் இருக்கின்றனர். இதிலும் சிலர் அமைச்சராகி, ஆங்கிலம்
பேச முடியாமல் திணறி, அதுவே அவரது பதவிக்கு 'வேட்டும்' வைப்பதுண்டு. இன்று
நுனி நாக்கு ஆங்கிலம் கட்டாயம் என்ற நிலையில், இவர்கள் எப்படி பேசி
சமாளிக்கிறார்கள். மதுரை காளவாசல் பகுதியில் வசிக்கும் ஆங்கில ஆசான் ரசூல்
இருந்தால்போதும். சமாளித்துவிடலாம். மதுரை காமராஜ் பல்கலையில் விசிட்டிங்
பேராசிரியராக இருக்கும் இவர், அரசியல்வாதிகளின் வீடுகளுக்கே சென்று
ரகசியமாக அடிப்படை ஆங்கில பேச்சுப்பயிற்சி அளித்து வருகிறார்.
''ஒரு முறை மதுரை எம்.பி.,யாக இருந்தவரிடம், வலிய சென்று, 'உங்களுடன்
இருப்பவர்கள் ஆங்கிலம் பேசினால் நல்லாயிருக்குமே. அதற்கு நான் பயிற்சி
தருகிறேனே' என்றேன். எனது 'அப்ரோச்' அவருக்கு பிடித்துவிட்டது. யாரிடம்
ஆங்கிலம் கற்பது என்று மனதிற்குள் தவித்துக் கொண்டிருந்த எம்.பி., 'முதலில்
எனக்கு நடத்துங்கள்' என்றுக்கூற, 5 மாதம் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை
அவரது கட்சி அலுவலகத்தில் பாடம் நடத்தினேன். இதை கேள்விப்பட்டு சில
அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் என்னிடம் பாடம் படித்தனர். இன்றும்
படிக்கின்றனர்,'' என்கிறார் ரசூல். அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, அரசு
அதிகாரிகள், கல்லூரி விரிவுரையாளர்கள், மல்டிநேஷனல் கம்பெனிகளில்
பணிபுரிபவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் பாடம்
நடத்துகிறார். இவரிடம் படிக்கும் வி.ஐ.பி., மாணவர்களின் பட்டியலை
பார்த்தால், 'இவர்கள்கூடவா...' என்று ஆச்சரியம் ஏற்படும். ''எல்லாருக்குமே
ஆங்கிலம் பேச, படிக்க வரும். முதலில் படிக்கவும், அடுத்து இலக்கணமும்,
பேசவும் ஐந்து மாதங்களுக்குள் கற்றுத்தருகிறேன். குறிப்பிட்ட தொகையை
கட்டணமாக பெறுகிறேன். பள்ளி பருவத்தில் ஆசிரியர் சரியாக பாடம் நடத்தாத
பட்சத்தில்தான் ஆங்கிலம் நமக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. விஷயம் இல்லாத
ஆசிரியர் சொல்கிறார். சாதாரண ஆசிரியர் விளக்குகிறார். நல்ல ஆசிரியர்
உதாரணத்துடன் விளக்குகிறார். மிகச்சிறந்த ஆசிரியர் சாதிக்க தூண்டுகிறார்.
இதில் நான்காவது வகை ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால், ஆங்கிலம்
நமக்கு எளிது. வெட்கத்தை விட்டு வருகிறவர்கள் ஜெயிக்கிறார்கள்.
இல்லாதவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்,'' என்கிறார் ரசூல். தொடர்புக்கு
98651 31868
-நமது சிறப்பு நிருபர் -


