Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலை விதிகள் பாதுகாப்பு முகாம்

சாலை விதிகள் பாதுகாப்பு முகாம்

சாலை விதிகள் பாதுகாப்பு முகாம்

சாலை விதிகள் பாதுகாப்பு முகாம்

ADDED : செப் 24, 2011 11:48 PM


Google News

அரூர்: அரூர் அருகே எருமியாம்பட்டியில் உள்ள இ.ஆர்.கே., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக சாலை விதிகள் பாதுகாப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களில் தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சக்தி தலைமை வகித்தார். முன்னதாக தமிழ்த்துறை தலைவர் வச்சிரம் வரவேற்றார். முகாமின் நோக்கம் பற்றி வேதியியல் துறைத்தலைவர் சிவக்குமார் பேசினார். தர்மபுரி மாவட்ட துணை போக்குவரத்து ஆனையர் சுகுமார், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பதுவைநாதன் பேசியதாவது: இன்றைய சூழலில் அதிக உயிரிழப்புகள் சாலை விபத்துகளால் தான் நிகழ்கிறது எனவும் அதற்கு காரணம் சாலை விதிகளை கடைப்பிடிக்காமை என்றும் சாலையில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிகளையும் கவனிக்க வேண்டிய அறிவிப்பு பலகையில் உள்ள கைகைகளையும், பாதசாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்து விலை மதிப்பற்ற உயிரை சாலை விபத்தில் பறிகொடுக்காமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்போம். இவ்வாறு அவர் பேசினார். நிர்வாக அலுவலர் அருள்குமார், மாணவிகள், ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் துறை தலைவர் ராஜா மற்றும் விரிவுரையாளர் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us