/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரோடு ஓரங்களில் குப்பை கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைரோடு ஓரங்களில் குப்பை கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
ரோடு ஓரங்களில் குப்பை கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
ரோடு ஓரங்களில் குப்பை கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
ரோடு ஓரங்களில் குப்பை கொட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
ADDED : ஜூலை 15, 2011 10:16 PM
வடமதுரை : வடமதுரை அய்யலூரில் மனுநீதி நாள் முகாம், கலெக்டர் நாகராஜன் தலைமையில் நடந்தது.
பழனிச்சாமி எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ., வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் அருண்மணி, வேடசந்தூர் தாசில்தார் மலைச்சாமி, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கலெக்டர் பேசியதாவது: கிராமந்தோறும் அரசின் நோக்கம் சென்றடையும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு, முதியோர் பென்ஷன் கிடைக்கும். திருமணம் செய்தாலும் தனிகுடித்தனமான, தனி அடுப்பு வைத்து சமையல் செய்தால் தான் ரேஷன்கார்டு கிடைக்கும். மனுக்கள் எண்ணிக்கை அதிகமாக வருவது, மக்கள் தேவை அதிகமாக இருப்பதை காட்டுகிறது. அதே நேரத்தில் அரசு அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதையும் மறுக்க முடியாது. காலியிடங்களை பூர்த்தி செய்யும் பணி அரசால் துவக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை போல இல்லாமல் சுகாதார வளாகங்களுக்கு அவசியம் குழாய் இணைப்பு தந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். சில நிறுவனங்கள் தங்கள் குப்பைகளை லாரிகளில் ஏற்றி வந்து இரவு நேரத்தில் ரோடு ஓரங்களில் கொட்டிவிடுகின்றன. நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தெரு விளக்குகள் எரிவதை உறுதி செய்ய அதிகாரிகள் இரவு ரோந்து செல்ல வேண்டும், குடிநீர், ரோடு வசதியை சிறப்பாக செய்ய வேண்டும்' என்றார்.


