ஆக்கிரமிப்பு அகற்றும்பணியில் தொய்வு
ஆக்கிரமிப்பு அகற்றும்பணியில் தொய்வு
ஆக்கிரமிப்பு அகற்றும்பணியில் தொய்வு
ADDED : ஆக 01, 2011 02:06 AM
மதுரை:மதுரை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள்,
தொய்வடைந்துள்ளன.மாநகராட்சியில் போக்குவரத்து அதிகம் மிகுந்த பகுதிகளில்
கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஜூலை 25க்குள்
அவற்றை ஒழுங்குபடுத்த, முன்னாள் கமிஷனர் செபாஸ்டின் கெடு விதித்தார். கெடு
முடிந்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் கமிஷனர் மாறுதலில்
சென்றதால், உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. நகரின் போக்குவரத்திற்கு
இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பை ஒழுங்குபடுத்த
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கமிஷனர் நடராஜன், இப்பிரச்னையில் சிறப்பு
கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.