/உள்ளூர் செய்திகள்/தேனி/லாஞ்சர் வெடித்த இடத்தில் துணை ராணுவ அதிகாரி விசாரணைலாஞ்சர் வெடித்த இடத்தில் துணை ராணுவ அதிகாரி விசாரணை
லாஞ்சர் வெடித்த இடத்தில் துணை ராணுவ அதிகாரி விசாரணை
லாஞ்சர் வெடித்த இடத்தில் துணை ராணுவ அதிகாரி விசாரணை
லாஞ்சர் வெடித்த இடத்தில் துணை ராணுவ அதிகாரி விசாரணை
ADDED : ஜூலை 27, 2011 10:38 PM
தேவாரம் : தேவாரத்தில் லாஞ்சர் வெடித்த இடத்தில் துணை ராணுவ அதிகாரி ராதா விசாரணை நடத்தினார்.
தேனி மாவட்டம், தேவாரத்தில் குண்டுவெடித்ததில் இரண்டு பேர் இறந்தனர். துணை ராணுவபடை அதிகாரி ராதா தலைமையிலான குழு தேவாரத்தில் நேற்று விசாரணை நடத்தியது. சம்பவத்தை பார்த்த முத்துமாரி, அவரது கணவர் செந்தூரப்பாண்டியனிடம், அவர்கள் கொண்டு வந்த ராக்கெட் லாஞ்சர் ஒன்றை காண்பித்தனர். 'இதேபோன்ற பொருளை தான் குணசேகரன் உடைத்தார். ஆனால் தலைப்பகுதி மட்டும் அப்படியில்லை,'என முத்துமாரி கூறினார்.
டி.எஸ்.பி., கலிபுல்லா, இன்ஸ்பெக்டர் உலகநாதனிடமும் ராதா ஆலோசனை நடத்தினர்.
லாஞ்சர் தான்: துணை ராணுவ அதிகாரி ராதா கூறுகையில்,'வெடித்தது டி.என்.டி., ரக லாஞ்சர். 700 கிராம் மெட்டல் பவுடர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். வெடித்த போது 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்ப அலை 20 அடி சுற்றளவில் பரவியிருக்க வேண்டும்,'என்றார். பிரவீன்குமார் அபினவு எஸ்.பி., கூறுகையில்,'வெடித்தது ராணுவத்தில் பயன்படுத்தும் ஒருவகையான லாஞ்சர். பயிற்சிக்கு பயன்படுத்தும்போது, சில லாஞ்சர் வெடிக்காமல் இருக்கும். அதனை ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம். இதனை குணசேகரினிடம் விற்றிருக்க வேண்டும்,'என்றார். பலியான குணசேகரன், பவுன்தாய் ஆகியோரின் உடலில் இருந்த வெடி பொருளின் உதிரி பாகங்களை போலீசார் நேற்று சேகரித்துள்ளனர்.