ADDED : ஜூலை 21, 2011 01:15 AM
ப.வேலூர்: ப.வேலூரில், மாயமான இளம்பெண்ணை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ப.வேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி மணிகண்டன்.
அவரது மனைவி விஜி (24). அவர், கடந்த, 9ம் தேதி அங்குள்ள ஸ்பின்னிங் மில்லுக்கு வேலைக்கு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் விஜி கிடைக்காததால், அதுகுறித்து ப.வேலூர் போலீஸில் மணிகண்டன் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மாயமான விஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


