கிராம ஊராட்சிகளின் வரைபடம் தயாரிப்பு
கிராம ஊராட்சிகளின் வரைபடம் தயாரிப்பு
கிராம ஊராட்சிகளின் வரைபடம் தயாரிப்பு
ADDED : செப் 09, 2011 11:27 PM
ஆண்டிபட்டி : உள்ளாட்சி தேர்தலையொட்டி, கிராம ஊராட்சிகள் குறித்த வரைபடங்களை தயார் செய்து வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி, இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கிராம ஊராட்சி, ஒன்றிய கவுன்சில், மாவட்ட கவுன்சில் ஆகியவற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் வரைபடங்களை, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் தயார் செய்து வருகின்றனர். ஓட்டுச்சாவடிகள், அவை அமைந்துள்ள இடங்கள், ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வழிகள், ஓட்டுச்சாவடிக்கும், மெயின் ரோட்டுக்கும் இடைப்பட்ட தூரம் ஆகியவற்றை விளக்கும் வரைபடங்கள் தயாரிக்கப்படுகிறது.ஆண்டிபட்டியில், பி.டி.ஓ., முகமது இப்ராஹிம், கலை செல்வராஜன் ஆகியோர் மேற்பார்வையில் பணி நடக்கிறது.


