/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தி.மு.க., ஆர்ப்பாட்டம் போலீசாருடன் வாக்குவாதம்தி.மு.க., ஆர்ப்பாட்டம் போலீசாருடன் வாக்குவாதம்
தி.மு.க., ஆர்ப்பாட்டம் போலீசாருடன் வாக்குவாதம்
தி.மு.க., ஆர்ப்பாட்டம் போலீசாருடன் வாக்குவாதம்
தி.மு.க., ஆர்ப்பாட்டம் போலீசாருடன் வாக்குவாதம்
ADDED : ஆக 01, 2011 11:11 PM
திண்டுக்கல் : அரசு பொய் வழக்கு போடுவதாக கூறி, தி.மு.க.,வினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததால் மாவட்ட செலாளர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் நடராஜன், நகர செயலாளர் பஷீர்அகமது, இளைஞரணி அமைப்பாளர் அசன்முகம்மது, துணை அமைப்பாளர் செந்தில்குமார், துணை தலைவர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், சுப.பெருமாள்சாமி, மாரியப்பன் உட்பட 3,047 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
வாக்குவாதம்: அப்போது போலீஸ் வேனில் ஏறுவதற்கு தி.மு.க.,வினர் முண்டியடித்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. கூடுதல் எஸ்.பி., சிவக்குமார் சமாதானப்படுத்தினார். வாகனம் பற்றாக்குறையாக இருந்ததால், தி.மு.க., வினர் நெடும்நேரம் காத்திருந்தனர். சிலர் போலீஸ் வேன் கூரை மீது ஏறினர். போலீசார் எச்சரித்தும் கேட்கவில்லை.