Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் இன்று பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் இன்று பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் இன்று பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் இன்று பொறுப்பேற்பு

ADDED : ஜூலை 28, 2011 01:25 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் அஷீஷ்குமார் இன்று பொறுப்பேற்கிறார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர் செல்வராஜ் நெல்லை மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஆஷிஷ்குமார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி புதிய கலெக்டர் அஷீஷ்குமார் இன்று காலை 11 மணிக்கு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொறுப்பேற்கிறார். அவரிடம் மாறுதலாகி செல்லும் கலெக்டர் செல்வராஜ் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு புதிய கலெக்டர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிறார். அங்கு அனைத்து துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us