Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போட்டி வேட்பாளர் கைதால் விழுப்புரம் நகரில் பரபரப்பு

போட்டி வேட்பாளர் கைதால் விழுப்புரம் நகரில் பரபரப்பு

போட்டி வேட்பாளர் கைதால் விழுப்புரம் நகரில் பரபரப்பு

போட்டி வேட்பாளர் கைதால் விழுப்புரம் நகரில் பரபரப்பு

ADDED : அக் 07, 2011 01:28 AM


Google News
விழுப்புரம் : முதல்வரை அவதூறாக பேசியதாக சுயேச்சை வேட்பாளரை கைது செய்ததால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் நகர சேர்மன் பதவிக்கு அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காததால் முன்னாள் நகர செயலாளர் நூர்முகமது சுயேச்சையாக போட்டியிட்டதால் தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியது.சுயேச்சையாக பிரசாரத்தைத் துவங்கிய நூர்முகமது, முதல்வர் ஜெ., படம், அ.தி.மு.க.,பெயரை நோட்டீசில் போட்டு முறைகேடாக பிரசாரம் செய்ததாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அசோக்குமார் போலீசில் புகார் செய்தார்.நூர்முகமதுவை ஆதரித்து பிரசாரம் செய்த மாஜி கவுன்சிலர் பாலகுரு, முதல்வர் ஜெ., மற்றும் அமைச்சர் சண்முகத்தை அவதூறாக பேசியதோடு, தட்டி கேட்ட தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் பாசறை செயலாளர் கார்த்திக் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நேற்று முன்தினம் பாலகுரு, நூர்முகமது ஆகியோர் மீது டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்தனர்.

இதற்காக நூர்முகமது, பாலகுருவை நேற்றுகாலை டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் விசாரணை நடத்தினர். தகவலறிந்த நூர்முகமது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்குப் பின், உட்கோட்ட நடுவரான தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில், நூர்முகமதுவிடம் புகாருக்கு விளக்கம் எழுதி வாங்கிக் கொண்டு பகல் 11 மணிக்கு இருவரையும் விடுவித்தனர். இது குறித்து நூர்முகமது நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 35 ஆண்டுகளாக அ.தி. மு.க., வில் உண்மையாக உழைத்தேன். எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சிகள் மற்றும் பலரது ஆதரவும் உள்ளது. சிறுபான்மையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனது வெற்றி வாய்ப்பை பொறுக்காத அ.தி.மு.க., வினர் நோட்டீஸ் அச்சிட்டு பொய் புகார் கொடுத்துள்ளனர். இதற்கு அமைச்சர் சண்முகம் தான் காரணம். தமிழகத்தில் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் இருந்தும் என் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர். வெற்றி பெற்று ஜெ., வை சந்திக்கலாமென இருந்தேன். என் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளதால், ஜெ., வை சந்திக்கும் முடிவை பரிசீலனை செய்வேன். இவ்வாறு நூர்முகமது கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us