கோவில்பட்டி: கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் பிரதோஷ விழா
மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது.கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க
சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு
பூஜைகள் நடந்தது.
இதையொட்டி காலையில் கணபதி பூஜையும், கும்பகலச பூஜையும்
நடந்தது. தொடர்ந்து வேதபாராயணம், ருத்திரஜெபம், அலங்கார தீபாராதனை நடந்தது.
இதையடுத்து சங்கரலிங்கசுவாமி, நந்தியம்பெருமானுக்கு பால், தேன், விபூதி,
பஞ்சகயம், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார
தீபாராதனை நடந்தது.இதேபோல் நடந்த பவுர்ணமி மாவிளக்கு பூஜையில் கணபதி பூஜை
நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார
மூர்த்திகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும்
நடந்தது. இதையடுத்து சுமார் 108 பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு பூஜை
செய்தனர். சிறப்பு பூஜைகளை சுப்பிரமணியய்யர் செய்திருந்தார். விழாவில்
கோயில் தலைவர் ராமராஜ், நிர்வாகக்கமிட்டி உறுப்பினர்கள் உட்பட ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.


