மாற்றுத்திறனாளிகள் விபரங்கள் தெரிவிக்க கோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் விபரங்கள் தெரிவிக்க கோர்ட் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் விபரங்கள் தெரிவிக்க கோர்ட் உத்தரவு
UPDATED : அக் 06, 2011 01:57 AM
ADDED : அக் 06, 2011 01:52 AM
புதுடில்லி: வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும்மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை தெரிவிக்க மத்திய அரசுக்கு புதுடில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பி்ல் அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் கணக்கெடு்ப்பின் போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களையும் சேர்க்கும் படி டில்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு , திட்டக்கமிஷன்,மற்றும் உணவு, பொது விநியோகத்துறைக்கு டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் சித்தார்த் மிருதுள் ஆகியோர் அனுப்பியுள்ள நோட்டடீஸில் நான்குவார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.


