Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழில் முனைவோர் குறைகேட்பு :"சைமா' வலியுறுத்தல்

தொழில் முனைவோர் குறைகேட்பு :"சைமா' வலியுறுத்தல்

தொழில் முனைவோர் குறைகேட்பு :"சைமா' வலியுறுத்தல்

தொழில் முனைவோர் குறைகேட்பு :"சைமா' வலியுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2011 09:50 PM


Google News
திருப்பூர் : 'தொழில் துறையில் ஏற்படும் பிரச்னை களுக்கு தீர்வு காண, மாவட்டம்தோறும் கலெக்டர் தலைமையில் தொழில் முனைவோர் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்,' என, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு 'சைமா' தலைவர் ஈஸ்வரன் அனுப்பியுள்ள மனு: நம் நாட்டில் ஜவுளி உற்பத்தியில் 50 சதவீதம் தமிழகத்தில் மேற்கொள்ளப் படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு ஜவுளி துறையின் பல்வேறு கட்டங்களில் ஏற்பட்ட மிக பெரிய பிரச்னைகள் குறித்து எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியில் உள்நாட்டு தேவையை கருத்தில் கொள்ளா தது; நூல் விலையில் உள்ள ஏற்றம் இறக்கம், கலால் வரி விதிப்பு ஆகியன ஜவுளி தொழிலுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. மிக முக்கியமாக கடந்த ஆறு மாதமாக சாயப்பட்டறை பிரச்னையில் கோர்ட் உத்தரவுப்படி, சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு, ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 70 ஆண்டு பாரம்பரியமான பனியன் தொழில், திருப்பூரை விட்டே போய் விடும் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தொழில் களை காப்பாற்ற வேண்டுமானால், அந் தந்த மாவட்டங்களில் அதன் கலெக்டர் தலைமையில், தொழில் முனைவோர் சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை ஆலோ சனை நடத்தி, அதன்படி தொழில் நிலவரம், ஏற்பட்டுள்ள பிரச்னை, அதற்கான நிவா ரணம் போன்ற அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் தொழில் கள் தடையில்லாமல் தொடர்ந்து நடக்கும். மாநில அரசு துறை வாரியாக திட்டங் கள் தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தேசிய அளவில் தொழில் துறையில் முதலிடம் பெற, இதுபோன்ற தொழில் முனைவோர் குறைதீர்ப்பு கூட்டங் கள் உதவியாக இருக்கும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us