/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் உலக ஈரல் தின விழாதூத்துக்குடியில் உலக ஈரல் தின விழா
தூத்துக்குடியில் உலக ஈரல் தின விழா
தூத்துக்குடியில் உலக ஈரல் தின விழா
தூத்துக்குடியில் உலக ஈரல் தின விழா
ADDED : ஆக 01, 2011 02:29 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக ஈரல் தினம் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ம் தேதி உலக ஈரல் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குடல் மற்றும் ஈரல் மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் மஞ்சள் காமாலை நோய் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமினை குடல் மற்றும் ஈரல் மருத்துவ சிகிச்சை பிரிவு தலைமை பேராசிரியர் ஜெகநாதன் தலைமையில் ஆர்எம்ஓ., சைலேஷ் துவக்கி வைத்தார். உலக ஈரல் தின விழா குறித்து டாக்டர் ஜெகநாதன் கூறும் போது, ஈரல் வியாதி தற்போது இந்தியாவில் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் அதிகம் பேர் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுபானங்கள் அருந்துவது தான் ஈரல் வியாதிக்கு முக்கிய காரணம் ஆகும். ஈரல் வியாதி உடனே ஏற்பட்டு உடனே சரி செய்யக்கூடிய வகை மற்றும் நிலைத்து நிற்கும் ஈரல் வியாதி என்று இருவகைப்படும். ஏ,பி,சி மற்றும் ஈ வைரஸ் தான் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த வைரஸ் தண்ணீர் மற்றும் ரத்தம் மூலம் பரவுகிறது. ஈரல் வியாதி ஏற்பட்டால் மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர், ரத்த பாதிப்பு, சிறுநீரக கோளாறு, ஈரல் புற்று நோய் போன்றவை ஏற்படுகிறது. இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் உள்ளது. ஈரல் வியாதிகள் தொடர்பாக அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது என்றார்.