ADDED : ஆக 11, 2011 12:55 AM
வேடசந்தூர் : ஊரக வேலை உறுதி திட்டத்தை முறைப்படி அமுல்படுத்த கோரி, விவசாயிகள் சங்கத்தினர், வேடசந்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். செயலாளர் துரைக்கண்ணன், துணை தலைவர் வெள்ளைச்சாமி, துணை செயலாளர் நடராசன், பொருளாளர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தண்டாயுதம் பேசினர். இதில், 119 ரூபாய் கூலி வழங்க வேண்டும்; பெண்களுக்கு பணி நேரம் குறைக்க வேண்டும்; வங்கி, தபால் அலுவலகம் மூலம் கூலி வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.


