/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/லாரி மீது கார் மோதல்பெண் பலி; 5 பேர் காயம்லாரி மீது கார் மோதல்பெண் பலி; 5 பேர் காயம்
லாரி மீது கார் மோதல்பெண் பலி; 5 பேர் காயம்
லாரி மீது கார் மோதல்பெண் பலி; 5 பேர் காயம்
லாரி மீது கார் மோதல்பெண் பலி; 5 பேர் காயம்
ADDED : ஜூலை 25, 2011 01:59 AM
மாமல்லபுரம்:கூவத்தூர் அருகே, லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில்,
பெண் இறந்தார்; இரு பெண்கள் உட்பட, ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 57; இவரது மனைவி சாரதாதேவி,
40; இவர்களது மகள்கள் நிஷாந்தினி, 23, கீர்த்தனா, 17, மகன் காண்டீபன், 28,
ஆகியோருடன், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு டாடா சுமோ காரில் நேற்று
காலை சென்றார்.தஞ்சாவூரைச் சேர்ந்த அலெக்சாண்டர் காரை
ஓட்டிச் சென்றார். கூவத்தூர் அடுத்த பரமன்கேணி வளைவில், கார் அதிவேகமாக
சென்றபோது, எதிரில் டைல்ஸ் ஏற்றி வந்த லாரியில் பயங்கரமாக மோதியது. இதில்,
சாரதாதேவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.காரில் பயணம் செய்த, ஐந்து பேர்,
படுகாயமடைந்தனர். அலெக்சாண்டர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும்,
மற்றவர்கள் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையிலும்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூவத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.