Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டி.எஸ்.பி., ஜீப் மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

டி.எஸ்.பி., ஜீப் மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

டி.எஸ்.பி., ஜீப் மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

டி.எஸ்.பி., ஜீப் மோதி விபத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

ADDED : ஆக 12, 2011 02:12 AM


Google News
மணப்பாறை: மணப்பாறை அருகே, போலீஸ் ஜீப் மோதிய விபத்தில், ஒருவர் இறந்த நிலையில், படுகாயமடைந்த தே.மு.தி.க., கிளைச் செயலர், நேற்று இறந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.திருச்சி மாவட்டம், மணப்பாறை டி.எஸ்.பி.,யாக இருப்பவர் தொல்காப்பியன். நேற்று முன்தினம், துறையூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்தச் சென்றார். ஜீப்பை டிரைவர் வெங்கடேஷ் ஓட்டினார்.குளித்தலை மெயின்ரோடு, களத்துப்பட்டி அருகே, பாலக்கட்டையில் உட்கார்ந்திருந்த வாலிபர்கள் சரவணன், ஜெயக்குமார், சதீஷ்குமார் மீது, நேற்று முன்தினம் காலை 6.45 மணியளவில், ஜீப் மோதியது.

படுகாயமடைந்த மூவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, சரவணன் இறந்தார். இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா, இறந்தவர் குடும்பத்துக்கு, ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார்,30, நேற்று காலை இறந்தார். களத்துப்பட்டி கிளை தே.மு.தி.க., செயலரான இவருக்கு, திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது. ஜெயக்குமாரின் இறுதிச் சடங்கில், ஏராளமான தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். திருமணமாகி ஒரு வாரமே ஆன, சதீஷ்குமார், 22, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us