/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மரபணு பருத்தி உற்பத்தி ஊக்குவிப்பை கைவிட விவசாய சங்கம் வேண்டுகோள்மரபணு பருத்தி உற்பத்தி ஊக்குவிப்பை கைவிட விவசாய சங்கம் வேண்டுகோள்
மரபணு பருத்தி உற்பத்தி ஊக்குவிப்பை கைவிட விவசாய சங்கம் வேண்டுகோள்
மரபணு பருத்தி உற்பத்தி ஊக்குவிப்பை கைவிட விவசாய சங்கம் வேண்டுகோள்
மரபணு பருத்தி உற்பத்தி ஊக்குவிப்பை கைவிட விவசாய சங்கம் வேண்டுகோள்
ADDED : ஆக 17, 2011 01:33 AM
திருவாரூர்: வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த நாளை நினைவு கூறும் வகையில் திருவாரூரில் விவாசயிகள் சங்கம் சார்பில் நடந்த கருந்தரங்கத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சேரன் தலைமை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவர் அறிவழகன், பொது செயலாளர் ரமேஷ், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் துரைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், நுகர்வோர் கூட்டமைப்பு மாநில தலைவர் கலாதரன், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன், சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் வரதாரஜன் உட்பட பலர் பேசினார். இந்திய வேளாண்மையை அடிமைப்படுத்தும் மான்சாண்டோ போன்ற அமெரிக்க கம்பெனிகளை மத்திய அரசு வெளியேற்ற வேண்டும். இந்திய உழவர்களுக்கு எதிரான 2005 விதை சட்டத்தை மத்திய அரசு கை விட வேண்டும். மான்சாண்டோ கம்பெனியின் மரபனு மாற்று பருத்தியை ஏற்கனவே தர்மபுரி, சேலம், மாவட்டங்களில் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு அரசு மூலம் இழப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய அரசின் பட்ஜெட்டில் மரபணு பருத்தி உற்பத்தியை ஊக்குவிப்போம் என்று கூறியுள்ளதை அரசு கைவிட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.