ADDED : ஆக 22, 2011 07:19 AM
புதுடில்லி:ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவாக, டில்லியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டில்லியில் பிரமாண்ட பேரணி நடந்தது.
இந்தியா கேட்டில் துவங்கிய இந்த பேரணி, திலக் மார்க் வழியாகச் சென்று, உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் ராம்லீலா மைதானத்தில் முடிவடைந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, உணர்ச்சிமயமாக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.