Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்

ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்

ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்

ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்

ADDED : அக் 12, 2011 02:26 AM


Google News
விழுப்புரம் : வாக்காளர் போட்டோவுடன் கூடிய ஓட்டுச் சீட்டுகள் கிடைக்காத வாக்காளர்கள் 14 ஆவணங்களை காண்பித்து ஒட்டளிக்கலாம் என கலெக்டர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வாக்காளர் போட்டோவுடன் கூடிய ஓட்டுச் சீட்டுகள் வழங்கும் பணி நடக்கிறது.

போட்டோவுடன் கூடிய ஓட்டுச் சீட்டுகள் கிடைக்காதவர்கள் தேர்தல் கமிஷன் அனுமதித்த 14 வகை ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்தால் ஓட்டளிக்க முடியும்.இதில் தேர்தல் கமிஷன் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், 31.5.2011க்கு முன்னதாக பெறப்பட்ட டிரைவிங் லைசென்ஸ், வருமான வரி அடையாள அட்டை (பான்கார்டு), மத்திய, மாநில, பொதுத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பொது நிறுவனங்கள் வழங்கிய போட்டோ வுடன் கூடிய பணியாளர் அடை யாள அட்டை காண்பிக்க வேண்டும்.பொதுத் துறை வங்கிகள், தபால் அலுவலகங்கள், விவசாய அடையாள அட்டை (31.5.2011க்கு முன்னதாக கணக்கு துவக்கியிருக்க வேண்டும்). 31.5.2011க்கு முன்னதாக வழங்கிய போட்டோவுடன் கூடிய ஓய்வூதியம் பெறும் ஆவணங்கள் (முன்னாள் படைவீரர் ஓய்வூதிய புத்தகம், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, முன்னாள் படை வீரர் சார்ந்தோர் சான்றிதழ்), போட்டோவுடன் கூடிய முன்னாள் சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.போட்டோவுடன் கூடிய பதிந்த பத்திரங்கள், 31.5.2011க்கு முன்னதாக வழங்கிய போட்டோவுடன் கூடிய ஜாதிச் சான்றிதழ், போட்டோவுடன் கூடிய ஆயுத உரிமங்கள், 31.5.2011க்கு முன்னதாக பெற்ற போட்டோவுடன் கூடிய மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் போட்டோவுடன் கூடிய வேலைச் சான்றிதழ், தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை ஆவணங்களாக காண்பித்து தேர்தலில் ஓட்டளிக்கலாம்.இவ்வாறு கலெக்டர் மணிமேகலை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us