/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரியில் ஆய்வு கருத்தரங்குசி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரியில் ஆய்வு கருத்தரங்கு
சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரியில் ஆய்வு கருத்தரங்கு
சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரியில் ஆய்வு கருத்தரங்கு
சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரியில் ஆய்வு கருத்தரங்கு
ADDED : அக் 12, 2011 01:09 AM
சேத்தியாத்தோப்பு : ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரியில்
தேசிய அளவிலான ஆய்வு கருத்தரங்கு துவக்க விழா கல்லூரி வளாகத்தில்
நடந்தது.இனிமையான கற்றலுக்கு கல்வி தொழில் நுட்ப கருவிகளின் பயன்பாடு எனும்
தலைப்பிலான 2 நாள் கருத்தரங்க துவக்க விழாவிற்கு கல்லூரி நிர்வாகி மகாவீர்
சந்த் தலைமை தாங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர்
முத்துமாணிக்கம், பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் உதவி
பேராசிரியர் மணி, முன்னிலை வகித்தனர். சி.எஸ்.,ஜெயின் கல்வியியல் கல்லூரி
முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஜெயின் கல்வி நிறுவனங்களின் துணைச்
செயலர் அபிராமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஆசிரியர்
கல்வி பல்கலைக் கழக பதிவாளர் வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
காரைக்குடி குன்றகுடி அடிகளார் கல்வியியல் கல்லூரி கல்வியியல் துறைத்
தலைவர் மோகன், சென்னை பல்கலைக் கழக கல்வியியல் துறை முன்னாள் தலைவர் குமரன்
ஆகியோர் கல்வி தொழில் நுட்ப கருவிகள் பற்றிய
விளக்கவுரையாற்றினர்.கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் கல்வி
நிறுனங்களைச் சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள்
கல்வியியல் இளங்கலை, முதுகலை மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.dinamalar cuddalre news


