Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் ஆக.15ம் தேதி சுதந்திர தின விழாமுன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உத்தரவு

நெல்லையில் ஆக.15ம் தேதி சுதந்திர தின விழாமுன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உத்தரவு

நெல்லையில் ஆக.15ம் தேதி சுதந்திர தின விழாமுன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உத்தரவு

நெல்லையில் ஆக.15ம் தேதி சுதந்திர தின விழாமுன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உத்தரவு

ADDED : ஜூலை 23, 2011 02:34 AM


Google News
திருநெல்வேலி:நெல்லையில் வரும் 15ம் தேதி நடக்கும் சுதந்திர தின விழா தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் அரசு சார்பில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை வகித்து கலெக்டர் நடராஜன் பேசியதாவது:கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். பாளை வ.உ.சி மைதானத்தை தயார் நிலையில் வைத்து போலீஸ் அணிவகுப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.சுதந்திர போராட்ட தியாகிகளை பொன்னாடை அணிவித்து கவுரவிக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நலத்திட்ட உதவிகள், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதில் டி.ஆர்.ஓ ரமண சரஸ்வதி, மாநகராட்சி கமிஷனர் சுப்பையன், போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ, உதவி ஆணையர் லயோலா இக்னேஷியஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், மகளிர் திட்ட அலுவலர் முத்துமீனாள், பி.ஆர்.ஓ இளங்கோ, சமூக நல அலுவலர் உமாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us