/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜவகர் நவோதயா வெள்ளிவிழா மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிஜவகர் நவோதயா வெள்ளிவிழா மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ஜவகர் நவோதயா வெள்ளிவிழா மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ஜவகர் நவோதயா வெள்ளிவிழா மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ஜவகர் நவோதயா வெள்ளிவிழா மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ADDED : அக் 06, 2011 12:59 AM
புதுச்சேரி : ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு,
மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடந்தது.
புதுச்சேரியில் நவோதயா வித்யாலயா
உண்டு உறைவிடப்பள்ளி 1986ல் கதிர்காமத்தில் துவக்கப்பட்டது. பின், ஜவகர்
நவோதயா வித்யாலயா பள்ளியாக 1990ல் காலாப்பட்டில் மாணவர் தங்கிப் படிக்கும்
வசதியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப் பள்ளி, 25வது ஆண்டைப்
பூர்த்தி செய்கிறது. வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. 'நம் நாட்டு வளர்ச்சியில்
ஜவகர் நவோதயா பள்ளியின் பங்கு' என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில்
தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மாணவர்கள் பேசினர். நிகழ்ச்சிக்கு
பள்ளி முதல்வர் வினயத்தான் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை, பள்ளி
ஆசிரியர்கள் செய்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பர்
மாதம் நடக்கும் வெள்ளி விழா நிறைவு விழாவில் பரிசுகள் வழங் கப்படும்.


