/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாக்காளர்களுக்கு மதுவிருந்தா குண்டர் சட்டம் காத்திருக்குவாக்காளர்களுக்கு மதுவிருந்தா குண்டர் சட்டம் காத்திருக்கு
வாக்காளர்களுக்கு மதுவிருந்தா குண்டர் சட்டம் காத்திருக்கு
வாக்காளர்களுக்கு மதுவிருந்தா குண்டர் சட்டம் காத்திருக்கு
வாக்காளர்களுக்கு மதுவிருந்தா குண்டர் சட்டம் காத்திருக்கு
ADDED : செப் 28, 2011 01:18 AM
மதுரை : உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு, மதுவிருந்து அளிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என மதுரை கலெக்டர் சகாயம் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: உள்ளாட்சி பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்வு செய்ய பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் பதவிகளை ஏலம்விட கூட்டம் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்றவற்றை நடத்துவது, கலந்து கொள்வது குற்றம். வாக்காளரை கவர பொது விருந்து, மதுவினியோகம் வழங்குவதும் குற்றம். இதுபோன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வி.ஏ.ஓ.,க்கள் இதுபற்றிய அறிக்கையை தாசில்தாருக்கு அளிக்க வேண்டும். இந்நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர்கள் தேர்தல் விதிகளில் கூறப்பட்ட தொகைக்கு மேல் செலவிடக் கூடாது. தினசரி செலவுகளை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வைத்திருக்க வேண்டும். இதற்கான கணக்குப் படிவங்களை, வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகங்களில் இலவசமாக பெறலாம்.தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் முதல் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை உரியபடிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.