ADDED : ஜூலை 24, 2011 01:19 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான நூல் கயிறு எரிந்து சாம்பலாகியது.கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சங்கரன் என்பவரின் மகன் துர்க்கைமுத்து என்பவர் வாலிபால் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டுகளுக்கான நூல் வலைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இதற்கான நூல் கயிறுகளை மதுரையில் இருந்து வாங்கி வீட்டின் மாடியில் சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென நூல் கயிறு வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு புகார் தெரிவித்ததின் பேரில், நிலைய அலுவலர் சுப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் நூல் கயிறுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.


