/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் நீச்சல் குளம், பார்க் அ.தி.மு.க., மந்தக்காளை உறுதிசிவகங்கையில் நீச்சல் குளம், பார்க் அ.தி.மு.க., மந்தக்காளை உறுதி
சிவகங்கையில் நீச்சல் குளம், பார்க் அ.தி.மு.க., மந்தக்காளை உறுதி
சிவகங்கையில் நீச்சல் குளம், பார்க் அ.தி.மு.க., மந்தக்காளை உறுதி
சிவகங்கையில் நீச்சல் குளம், பார்க் அ.தி.மு.க., மந்தக்காளை உறுதி
ADDED : அக் 07, 2011 10:52 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 14, 15, 19,வார்டு அகிலாண்டபுரம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் மந்தக்காளை ஒட்டு கேட்டார்.
அவர் பேசியதாவது: கிடப்பில் போடப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் நவீன முறையில் புதிதாக கட்டப்படும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 வார்டுகளுக்கு ஒரு இடத்தில் பார்க் வசதியுடன் நவீன நீச்சல்குளம் அமைக்கப்படும். 5 வார்டுகளை ஒருங்கிணைத்து நவீன கழிப்பறை கட்டித்தரப்படும்.மாதம் ஒரு முறை குறை தீர் கூட்டம் நடத்தப்படும். நகராட்சி அலுவலகத்தில் நிரந்தர புகார் பெட்டி வைக்கப்படும். நகரில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களால் லோ வோல்டேஜ் மின்சாரம் வினியோகிக்கப்படுவதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தடையில்லா மின் வினியோகத்திற்கு வழி செய்யப்படும். தூய்மையான, நேர்மையான நிர்வாகம் நடைபெறும். கட்டட வரைபட அனுமதி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் தடையில்லா குடிநீர் வழங்கப்படும். என்றார். மாவட்ட செயலாளர் முருகானந்தம், நகர செயலாளர் ஆனந்தன், அவைத்தலைவர் பாண்டி, சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சேக்தாவுது, முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் மாதவன்,நகர் இளைஞரணி செயலாளர் குமார், வட்ட பிரதிநிதி நவம், கவுன்சிலர் வேட்பாளர்கள் சுபா.ராசு ஆசிரியர், மீனா, பர்வீன் பேகம் உடன் சென்றனர்.


