ADDED : ஆக 26, 2011 11:29 PM
சிவகங்கை : மாவட்டத்தில் எஸ்.பி., முதல் 2ம் நிலை போலீசார் வரை தகவல்களை பறிமாறிக்கொள்ள போலீசாருக்கு பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு வழங்கப்பட்டது.பன்னீர் செல்வம் எஸ்.பி., தலைமை வகித்தார்.
கூடுதல் எஸ்.பி., கண்ணன், பி.எஸ்.என்.எல்., கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர். 1,300 பி.எஸ்.என்.எல்., சிம்கார்டுகள் வழங்கப்பட்டது.இதற்கான மாத வாடகை 30 ரூபாய் கட்டவேண்டும். போலீசாருக்குள் பேசிக்கொள்ள கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு பி.எஸ். என்.எல்.,லில் பேச நிமிடத்திற்கு 49 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்


