Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற 3 மருத்துவ மாணவர்கள்

தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற 3 மருத்துவ மாணவர்கள்

தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற 3 மருத்துவ மாணவர்கள்

தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற 3 மருத்துவ மாணவர்கள்

ADDED : செப் 03, 2011 10:45 PM


Google News

கான்பூர்:உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர், விஷம் குடித்து ஆபத்தான நிலையில், மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.



உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி என்ற அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது.

இக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருபவர்கள் விவேக் கவுதம், ÷ஷாப்ஹிட் மற்றும் சஞ்சீவ் குமார். அவர்கள் விஷம் குடித்ததால், ஹேலெட் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கி இருந்த கல்லூரி விடுதி அறையை சோதனையிட்டதில், கடிதம் ஒன்று கிடைத்தது. அதில்,'அவர்கள் மூவரும் உயிர் வேதியியல் பாட தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களை ஆசிரியர், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அதனால் மனம் வருந்திய அவர்கள், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.



நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொள்ள விஷம் அருந்தியதும் தெரியவந்தது. தற்போது இவர்கள் மூவரும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us