Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கொய்யாப் பழம் விற்றவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் : செல்லூர் ராஜு

கொய்யாப் பழம் விற்றவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் : செல்லூர் ராஜு

கொய்யாப் பழம் விற்றவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் : செல்லூர் ராஜு

கொய்யாப் பழம் விற்றவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் : செல்லூர் ராஜு

ADDED : செப் 03, 2011 10:56 PM


Google News
Latest Tamil News
மதுரை: ''மதுரையில், கொய்யாப் பழம், சீப்பு விற்றவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாறிவிட்டனர்.

மாநகராட்சியில், அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருந்தது,'' என, அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். மாநகராட்சியில், நடந்த நிலுவை ஓய்வூதிய பலன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அவர் பேசியாதவது: தி.மு.க., ஆட்சியில், மதுரையில் நடந்த துஷ்பிரயோகத்தில், மாநகராட்சியின் திட்டங்கள், துவம்சம் செய்யப்பட்டன. தன் சொத்தை அபகரித்தவர்களுக்கு, சொக்க நாதர் சரியான பாடம் கற்பித்தார். கடந்த 15 ஆண்டுகளாக, தி.மு.க.,வின் சொத்தாக, மாநகராட்சி உள்ளது. ஜெ., கொண்டு வந்த, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்ட பணத்தை, தி.மு.க., நிர்வாகம் சீரழித்துவிட்டது. கொய்யாப் பழம், சீப்பு விற்றவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாறிவிட்டனர். மாநகராட்சியில் அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின், மாநகராட்சி பணியில், அ.தி.மு.க., தலையிடுவதில்லை. அதிகாரிகளுக்கு, முதல்வர் முழு சுதந்திரம் அளித்துள்ளார். கடந்த காலத்தில், சந்தித்த சங்கடங்களை உணர்ந்து, அதிகாரிகள் தயவு செய்து, மாற வேண்டும். மாநகராட்சியின் வளர்ச்சிக்கு, நிதியளிக்க அ.தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us