/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பம் குடிநீர் :திட்டம் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய முடிவுகம்பம் குடிநீர் :திட்டம் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய முடிவு
கம்பம் குடிநீர் :திட்டம் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய முடிவு
கம்பம் குடிநீர் :திட்டம் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய முடிவு
கம்பம் குடிநீர் :திட்டம் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய முடிவு
ADDED : ஆக 30, 2011 12:40 AM
கம்பம்:கம்பம் குடிநீர் மேம்பாட்டு திட்டம் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.கம்பத்தில் குடிநீர் இணைப்புகள் 11 ஆயிரத்து 350 உள்ளது.
குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 60 லட்சம் லிட்டர் வரை தேவைப்படுகிறது. ஆனால் குடிநீர் வடிகால் வாரியம் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகம் செய்கிறது. எனவே பொதுமக்களின் குடிநீர் தேவையை போக்கவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.கம்பத்தின் குடிநீர் தேவையை போக்க கடந்த 2004-ல் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அனுமதி பெறுவதில் பல இடர்பாடுகள் ஏற்பட்டது. நிதி அனுமதி பெறுவதிலும் தடங்கல் ஏற்பட்டது. எனவே திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.இந்நிலையில் புதிய திட்டத்தை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. தயாரிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டை இப்போதுள்ள விலைப்புள்ளிகள் அடிப்படையில் திருத்தியமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


