Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"பகவான் நாமம் சொன்னால் மனம் பக்குவப்படும்'

"பகவான் நாமம் சொன்னால் மனம் பக்குவப்படும்'

"பகவான் நாமம் சொன்னால் மனம் பக்குவப்படும்'

"பகவான் நாமம் சொன்னால் மனம் பக்குவப்படும்'

ADDED : ஆக 30, 2011 12:51 AM


Google News
அவிநாசி : ''பகவான் நாமத்தை தொடர்ந்து சொல்லச் சொல்ல நமது மனம் பக்குவப்படும்,'' என்று ஸ்ரீதுகாராம் கணபதி மஹராஜ் கூறினார்.அவிநாசி அருகே அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயாவில் 'மஹா பக்த விஜயம்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

ஸ்ரீதுகாராம் கணபதி மஹராஜ் பேசியதாவது:நமது இந்து மதம் தத்துவங்கள் நிறைந்தது. மதத்தை அடியொற்றி வாழ்ந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்ட அடியார்கள் நமக்கு பல்வேறு பொக்கிஷங்களை விட்டுச் சென்றுள்ளனர். அடியார்களின் சாரத்தை நாம் அனுபவித்து பருகினால் போதும்; பகவான் நமக்கு அனைத்தும் கொடுப்பார்.பகவான் நாமாவை நாளும் சொல்ல வேண்டும். ஒரு துளி எவ்வாறு ஆறாக பெருகுகிறதோ, நம்மிடம் பகவானின் பக்தி பெருகும். அவன் நாமாவை தினமும் சொல்லச் சொல்ல மனம் பக்குவப்படும். இறைவனின் திருநாமம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் சென்று சேருமிடம் அவனது திருவடிதான்.சித்தாந்தம் பல்வேறாக இருந்தாலும் கூட, நாம சங்கீர்த்தனம் செய்தாலே இறைவனது அருளை பெறலாம். இதே வழியைத்தான் அனைத்து அடியார்களும் பின்பற்றி, பகவானை அடைந்துள்ளனர். கணவன் செய்யும் தர்மகாரியங்களுக்கு மனைவி துணை நிற்பதால், அவளை தர்மபத்தினி என்கின்றனர்.பண்டரிபுரத்தில் ஸ்ரீஞானேஸ்வரரும், ஸ்ரீநாமதேவரும் பல வழிகளில் இறை சேவை புரிந்துள்ளனர். அவர்களை அடியொற்றி பல அடியார்கள் இன்றளவும் இறைவனுக்கு தொண்டு செய்து வருகின்றனர், என்றார்.இச்சொற்பொழிவு நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us