/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடியில் ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா "கோஆப்டெக்ஸ்'பரமக்குடியில் ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா "கோஆப்டெக்ஸ்'
பரமக்குடியில் ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா "கோஆப்டெக்ஸ்'
பரமக்குடியில் ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா "கோஆப்டெக்ஸ்'
பரமக்குடியில் ஒரு கோடி கைத்தறி சேலைகள் தேக்கம் : விசைத்தறியை ஊக்குவிக்கிறதா "கோஆப்டெக்ஸ்'
பரமக்குடி : கடந்த இரு மாதங்களாக 'கோ-ஆப்டெக்ஸ்' கொள்முதல் செய்யாததால், பரமக்குடி கூட்டுறவு சங்கங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான கைத்தறி சேலைகள் தேக்கமடைந்துள்ளன.
மேலும் தறி நெய்ய கச்சாப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் கூட்டுறவு சங்கங்கள் சிரமத்தில் உள்ளன. இதற்கு மத்தியில் கோ-ஆப்டெக்ஸ் விசைத்தறியை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு ரகங்களை புகுத்தியுள்ளன. குறிப்பாக சேலைகள், பெட்சீட்கள், சுடிதார் மெட்டிரியல் உள்ளிட்டவைகள் அடங்கும். பி.எம்.எஸ்., (கைத்தறி) மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் கூறியதாவது: பல கோடி மதிப்புள்ள ஜவுளிகள், கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்துள்ளன. கோ-ஆப்டெக்ஸ் தனக்குரிய ரகத்தை கொள்முதல் செய்யாதது கேலிக்கூத்தாக உள்ளது.
கைத்தறிக்காக உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் இன்று விசைத்தறியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது. ஜவுளிகளை கொள்முதல் செய்தால் தான் நெசவாளர்களுக்கு கூலி வழங்க முடியும். இல்லாத பட்சத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் அபாயநிலை உள்ளது, என்றார். கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் அமிர்தலிங்கம் கூறியதாவது: தற்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் நெய்யப்பட்ட கைத்தறி துணிகளை சென்னையில் உள்ள தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு சாம்பிள் அனுப்ப கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் தேர்வு செய்த ரகங்களை கொள்முதல் செய்ய உள்ளோம், என்றார்.


