/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஜவுளித்துறையினருக்கு ஆறுதல்: "டீமா' கருத்துஜவுளித்துறையினருக்கு ஆறுதல்: "டீமா' கருத்து
ஜவுளித்துறையினருக்கு ஆறுதல்: "டீமா' கருத்து
ஜவுளித்துறையினருக்கு ஆறுதல்: "டீமா' கருத்து
ஜவுளித்துறையினருக்கு ஆறுதல்: "டீமா' கருத்து
ADDED : ஜூலை 24, 2011 02:25 AM
திருப்பூர் : புதிய வர்த்தக வரிவிதிப்பை ரத்து செய்திருப்பது, ஜவுளித்துறையினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என, 'டீமா' சங்கம் தெரிவித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அறிக்கை: வர்த்தக வரியில் வசூலிக்கப்பட்ட நான்கு சதவீத வாட் வரியை, ஐந்து சதவீதமாக உயர்த்தி, கடந்த 12ம்தேதி அரசு அறிவித்தது.
இதுவரை இல்லாத பனியன் துணிக்கும் ஐந்து சதவீத வரி விதிக்கப்பட்டதால், ஜவுளித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஜவுளித்தொழில் தற்போது சந்தித்து வரும் சிரமங்கள், தொழில் மந்தநிலை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.ஜவுளித்தொழிலின் நிலையை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு வாட் வரி தள்ளுபடி செய்ததை 'டீமா' சங்கம் வரவேற்கிறது. தொழில்நலனுக்காக, வரிவிதிப்பை ரத்து செய்தது தொழில் துறையினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என, தெரிவித்துள்ளார்.


