ஊட்டி : 'ஐலெண்ட்' அறக்கட்டளை சார்பில் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகமாக போட்டியிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு கலை பிரசாரம் நடத்தப்பட்டது.
இதனை அல்போன்ஸ்ராஜ் துவக்கி வைத்தார். கடந்த மாதம் 13ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது. பிரசாரத்தின் மூலம்,'சமுதாய சிந்தனையுள்ள, நல்ல திறமையான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்று அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதோடு, ஊராட்சிகளை வளமைப்படுத்த வேண்டும்; பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது. பிரசாரத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், குன்னூர் ஒருங்கிணைப்பாளர் தீபா, கூடலூர் ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி உட்பட பலர் செ#திருந்தனர்.


