/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/படுக்கை வசதியில்லாத செம்பனூர் அரசு ஆஸ்பத்திரிபடுக்கை வசதியில்லாத செம்பனூர் அரசு ஆஸ்பத்திரி
படுக்கை வசதியில்லாத செம்பனூர் அரசு ஆஸ்பத்திரி
படுக்கை வசதியில்லாத செம்பனூர் அரசு ஆஸ்பத்திரி
படுக்கை வசதியில்லாத செம்பனூர் அரசு ஆஸ்பத்திரி
ADDED : ஆக 11, 2011 10:47 PM
கல்லல் : படுக்கை வசதியில்லாததால் செம்பனூர் வட்டார மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர கிராம மக்கள் தயங்குகின்றனர்.
செம்பனூர் வட்டார மருத்துவமனையில் கல்லல், அரண்மனைசிறுவயல், நெற்புகப்பட்டி, கூமாச்சிப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். 24 மணிநேர மருத்துவமனையாக இருந்தாலும் இங்கு தங்கி சிகிச்சை பெறுவதற்கு படுக்கை வசதி கிடையாது.பிரசவத்திற்காக காரைக்குடி ,திருப்பத்தூர், சிவகங்கைக்கு பெண்கள் செல்லும் அவலம் காணப்படுகிறது.ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பிரசவ கட்டடமும் பலமாதமாகியும் திறக்கப்படாமலேயே உள்ளது. குடிநீர்,கழிப்பிட வசதி எதுவும் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் சுற்று சுவர்கள் இல்லாததால் ஆடு,மாடுகளால் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்த மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


