/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 09, 2011 02:53 AM
புதுச்சேரி : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.
சார்பில் பெண்களுக்கான 'மகப்பேறு காலப் பிரச்சினைகள்' மற்றும் 'தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்' நடந்தது.திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சிவஞானம் நோக்கவுரை ஆற்றினார். தலைமை ஆசிரியை சிவகாமி தலைமை தாங்கினார்.தவளக்குப்பம் கிராமப்புற செவிலியர் பவுனம்மாள், செவிலியர் கல்லூரி பயிற்சி மாணவியர் மனோகரி, தனலட்சுமி, பிரியங்கா, தரணி ஆகியோர் இளம்பருவத்தில் பெண்களுக்கு உருவாகும் பிரச்னைகள், அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கம் அளித்தனர்.முகாமில் பள்ளி மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.


