ADDED : ஜூலை 26, 2011 12:47 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் சவேரியார் பாளையத்தைச் சேர்ந்தவர் முட்டைக் கண் ரவி,36.
இவர் மீது கொள்ளை, கொலை, வழிப்பறி, மிரட்டல் உட்பட 15 வழக்குகள் இருந்தன. இதில் ஒன்பதில் விடுதலை ஆனார். மற்றவை நிலுவையில் உள்ளன. தி.மு.க., பின்னணி இருந்ததால், கடந்த ஆட்சியில், கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இவர் மீது போலீசார் குறி வைத்துள்ளனர். கடந்த வாரம், என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த கருப்பையா என்பவரைப் பணம் கேட்டு மிரட்டியதாக, கைது செய்தனர். கடந்த மாதம் ரேஷன் அரிசி கடத்தியதாகவும், உணவு கடத்தல் தடுப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், சந்திரசேகரன் எஸ்.பி., பரிந்துரையின்படி, ரவியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். நேற்று, திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.