/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் "விசிட்'பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் "விசிட்'
பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் "விசிட்'
பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் "விசிட்'
பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் "விசிட்'
ADDED : ஜூலை 19, 2011 09:48 PM
வால்பாறை : வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வில் சில பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளன. இந்நிலையில் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி வால்பாறை, முடீஸ், சோலையார் அணை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் வனவிலங்குகளுக்கு பயந்து தான் மாணவர்கள் பள்ளிக்கு வர மறுப்பதும், பள்ளிக்கு போதுமான பஸ் வசதி இல்லாததாலும் தான் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்தும் முதன்மை கல்வி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். ஆய்வின் போது வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோமு, முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகவல்லி, சோலையாறுஅணை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரவு ஆகியோர் உடன் இருந்தனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிறுவர்களின் நோய்களுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி நடந்தது.


