Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தரைவழி இணைப்பிற்கு புதிய திட்டங்கள் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

தரைவழி இணைப்பிற்கு புதிய திட்டங்கள் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

தரைவழி இணைப்பிற்கு புதிய திட்டங்கள் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

தரைவழி இணைப்பிற்கு புதிய திட்டங்கள் பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

ADDED : ஜூலை 25, 2011 09:47 PM


Google News

பொள்ளாச்சி : பி.எஸ்.என்.எல்., லில் 'மொபைல்போனுக்கு' வழங்கும் சலுகைகள் போலவே தரைவழி இணைப்பிற்கும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: 'மொபைல்போன்களுக்கு' இருக்கும் 'பிரன்ட்ஸ் அன்ட் பேம்லி பேக்' போலவே தரைவழி இணைப்பிற்கும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'பிரன்ட்ஸ் அன்ட் பேம்லி பேக்கில்' ஒரு எண்ணை சேர்க்க ரூபாய் 29 செலுத்த வேண்டும். இரண்டு எண்களுக்கு 49 ரூபாயும், மூன்று எண்களுக்கு 59 ரூபாய் செலுத்த வேண்டும். இது போன்ற 'பூஸ்டர்' கார்டுகளை போடும் போது, காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு நிமிடத்துக்கு 20 பைசாவில் பேசி கொள்ளலாம். இரவு 9.00 மணி முதல் காலை 8.00 மணி வரை 10 ஒரு நிமிடத்துக்கு 10 பைசாவில் பேசி கொள்ளலாம். 'லேன்ட்-லைன்' அழைப்புகளுக்கு மூன்று நிமிடங்களுக்கு 1 ரூபாயில் பேசி கொள்ளலாம். இவையனைத்தும் மொபைல்போன் மற்றும் தரைவழி இணைப்புகளுக்கு பொருந்தும். 'பிரன்ட்ஸ் அன்ட் பேம்லி பேக்கில்' உள்ள அனைத்து சலுகைகளும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us