/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நெல்லை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் தேர்வுடாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நெல்லை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் தேர்வு
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நெல்லை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் தேர்வு
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நெல்லை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் தேர்வு
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நெல்லை மாவட்டத்தில் 17 ஆசிரியர்கள் தேர்வு
ADDED : செப் 03, 2011 11:54 PM
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் 17 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நாளை (5ம் தேதி) நடக்கும் விழாவில் கவுரவிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2010-11ம் கல்வி ஆண்டில் கல்வியில் சிறப்பான சேவை புரிந்தவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இந்த விருதுக்கு தேர்வு பெற்றவர்களின் விபரமாவது: பள்ளிக் கல்வித் துறை: >கல்யாணி (மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கல்யாணி, பொய்கை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருணகிரி முருகன், வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வராஜ், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சிசிலியா சுகந்தி, குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுப்பாராஜ், பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலி ராஜாபாய்.மெட்ரிக்: >விநாயாக மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் முருகேஷ், திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொன்னழகன். தொடக்க கல்வித் துறை: >மானூர் பள்ளமடை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, புன்னைவனம் பஞ்.,யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை ரூபி, வடக்குப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜ், சிந்தாமணி பஞ்.,யூனியன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி சுகிர்தபாய், திசையன்விளை ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன். இட்டமொழி விஜயஅச்சம்பாடு இந்து அருள்நெரி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லீலாவதி, புளியங்குடி கட்டளைகுடியிரப்பு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் காஜா முகைதீன், கொடிக்குறிச்சி இந்து மறவர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், கீழப்புலியூர் ஆர்.சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்பூமாலைராசு ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 நல்லாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தனித்தனியாக அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் நாளை (5ம் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் இந்த நல்லாசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு, வெள்ளிப் பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் வழங்கி கவுரவிக்கிறார். இந்த விழாவில் கல்வித் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் நாளை (5ம் தேதி) காலை 10 மணிக்கு விழா அரங்கத்தில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருது விழாவில் தங்களுடன் ஒருவரையும் நல்லாசிரியர்கள் அழைத்து செல்லலாம். மாவட்டத்தில் ஏற்கனவே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், சிங்காரத்தோப்பு பஞ்.,யூனியன் பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல் ஜெபராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். டில்லியில் நாளை (5ம் தேதி) நடக்கும் விழாவில் ஜனாபதி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.


