/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பெதப்பம்பட்டியில் விழிப்புணர்வு பேரணிபெதப்பம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி
பெதப்பம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி
பெதப்பம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி
பெதப்பம்பட்டியில் விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 08, 2011 10:07 PM
உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் மற்றும் 21ம் தேதி
நடைபெறும் மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குடிமங்கலம் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் வரும் 21ம் தேதி பெதப்பம்பட்டி அரசு
மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.முகாம் குறித்து பொதுமக்களுக்கு
தெரிவிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரையும் பள்ளியில்
சேர்க்க வலியுறுத்தியும்
சோமவாரபபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
பேரணி மேற்கொண்டனர். பேரணியை எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் கலைச்செல்வி
துவக்கி வைத்தார். சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மாணவர்கள், தலைமையாசிரியர் மணி, குடிமங்கலம் ஒன்றிய மாற்றுத்திறனாளிகளுக்
கான வாழ்வதார மைய ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா ராணி, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.


