Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி

மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி

மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி

மக்கள் பாராட்டும் வகையில் பணிகள் நடைபெறும் : கடையநல்லூர் அதிமுக.,வேட்பாளர் உறுதி

ADDED : அக் 11, 2011 02:21 AM


Google News

கடையநல்லூர் : 'கடையநல்லூர் நகராட்சியில் அனைத்து பணிகளுமே மக்கள் பாராட்டும் வகையில் பெர்பெக்டாக நடக்கும்' என அதிமுக வேட்பாளர் முத்துலெட்சுமி உறுதிபட தெரிவித்தார்.

கடையநல்லூர் நகராட்சி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முத்துலெட்சுமி வார்டு வாரியாக ஓட்டுகளை சேகரித்து வருகிறார். தனது முதற்கட்ட பிரசாரத்தை அனைத்து வார்டுகளிலும் முடித்துவிட்ட நிலையில் நகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அவர் கூறியதாவது:- கடையநல்லூர் நகராட்சியில் ஓட்டு கேட்டு தெரு மற்றும் வீடு வீடாக சென்றபோதெல்லாம் குடிநீர் பிரச்னைதான் முக்கியமாக காணப்பட்டு வருகிறது. எல்லா வீடுகளிலும் இந்த பிரச்னையை பொதுமக்கள் தெரிவித்து வரும் நிலையில் இதற்கான நிரந்தர தீர்வு காண்பதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதியுடன் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செந்தூர்பாண்டியன் பரிந்துரையின்படி சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.



கடையநல்லூர் நகராட்சியில் பெரும்பாலான சாலைகள் கடந்த 5 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன. முக்கிய சாலைகளும் சீரற்று கிடக்கின்றன. இந்த சாலைகள் எல்லாம் அதிமுக வெற்றி பெற்றால் நிச்சயமாக பராமரிக்கப்படும். கடையநல்லூர் நகராட்சியில் சுத்தம், சுகாதாரம் பேணி பாதுகாக்கப்படும். பொதுமக்கள் கேட்கும் அத்தனை கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றி வைக்கப்படும். மக்கள் கேட்டதை கொடுக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் ஆட்சி புரிவதால் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.



கடையநல்லூர் நகராட்சியை தமிழகத்தில் நம்பர் 1 நகராட்சியாக உருவாக்கி தருவதுடன், நகராட்சியில் எல்லா பணிகளும் மக்கள் பாராட்டும் வகையில் பெர்பெக்டாக நடக்கும்'' என்றார். வேட்பாளருடன் நகர செயலாளர் கிட்டுராஜா, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகன், வார்டு செயலாளர் அமராவதி முருகன், மெடிக்கல் சரவணன், மேலக்கடையநல்லூர் மாரித்துரை உடனிருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us